/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/ மாநில பால் பேட்மின்டன் எஸ். ஆர்.எம்., முதலிடம் மாநில பால் பேட்மின்டன் எஸ். ஆர்.எம்., முதலிடம்
மாநில பால் பேட்மின்டன் எஸ். ஆர்.எம்., முதலிடம்
மாநில பால் பேட்மின்டன் எஸ். ஆர்.எம்., முதலிடம்
மாநில பால் பேட்மின்டன் எஸ். ஆர்.எம்., முதலிடம்
ADDED : ஜூலை 31, 2024 04:58 AM
சென்னை, : பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி சார்பில், மாநில அளவிலான பால் பேட்மின்டன் போட்டி, திண்டுக்கல் மாவட்டத்தில் நடந்தது.
இதல், எஸ்.ஆர்.எம்., - லயோலா உட்பட கல்லுாரிகள், கிளப் அணிகள், நாக் அவுட் மற்றும் லீக் முறையில் நடந்தது.
காலிறுதியில் எஸ்.ஆர்.எம்., அணி, 35 - 18, 35 - 22 என்ற கணக்கில் சேலம் மோதில்லால் அணியை வீழ்த்தி லீக் சுற்றுக்கு தகுதி பெற்றது.
'லீக்' போட்டிகளில், எஸ்.ஆர்.எம்., அணி, லயோலா, திண்டுக்கல் ஏ.ஆர்., மருத்துவமனை, எண்ணுார் பி.பி.சி., - உள்ளிட்ட அணிகளை தோற்கடித்தது.
அனைத்து லீக் சுற்றுகள் அடிப்படையில், காட்டாங்கொளத்துார் எஸ்.ஆர்.எம்., பொறியியல் அணி முதலிடத்தை பிடித்து தங்கம் வென்றது.
லயோலா, கடலுார், பரங்கிப்பேட்டை பி.பி.சி., - திண்டுக்கல் ஏ.ஆர்., மருத்துவமனை ஆகிய அணிகள், அடுத்தடுத்த இடங்களை பிடித்து அசத்தின.