/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ 'கிரைண்டர்' செயலி மூலம் ரூ.32,000 பறித்தவருக்கு 'கம்பி' 'கிரைண்டர்' செயலி மூலம் ரூ.32,000 பறித்தவருக்கு 'கம்பி'
'கிரைண்டர்' செயலி மூலம் ரூ.32,000 பறித்தவருக்கு 'கம்பி'
'கிரைண்டர்' செயலி மூலம் ரூ.32,000 பறித்தவருக்கு 'கம்பி'
'கிரைண்டர்' செயலி மூலம் ரூ.32,000 பறித்தவருக்கு 'கம்பி'
ADDED : செப் 22, 2025 04:01 AM
திருநெல்வேலி: திருநெல்வேலியில் 'கிரைண்டர்' செயலி மூலம் வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதுாரை சேர்ந்தவர் அருணாச்சலம், 27; இன்ஜினியரிங் பட்டதாரி. கல்லுாரிகளில் மாணவர்களுக்கு அரசு திட்டத்தின் பயிற்றுநர்.
ஓரின சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் கிரைண்டர் செயலியை பயன்படுத்தினார். அதில் பழகிய நபர் ஒருவர் மொபைல்போனில் பேசி, அருணாச்சலத்தை திருநெல்வேலி தச்சநல்லுாருக்கு அழைத்தார்.
அங்கு சென்ற அருணாச்சலத்தை, நான்கு பேர் கும்பல் தாக்கி, அவரது வங்கி கணக்கில் இருந்த, 32,000 ரூபாயை ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலியான ஜிபே வாயிலாக பறித்தனர்.
அருணாச்சலம் புகாரின்படி, தச்சநல்லுார் போலீசார், துாத்துக்குடியை சேர்ந்த ஜெயந்த்குமார், 24, என்பவரை கைது செய்தனர். அவரது கூட்டாளிகள் மூவரை தேடுகின்றனர்.