/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ மாணவிக்கு தொல்லை 2 வார்டன்கள் கைது மாணவிக்கு தொல்லை 2 வார்டன்கள் கைது
மாணவிக்கு தொல்லை 2 வார்டன்கள் கைது
மாணவிக்கு தொல்லை 2 வார்டன்கள் கைது
மாணவிக்கு தொல்லை 2 வார்டன்கள் கைது
ADDED : செப் 22, 2025 04:00 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டன், நடவடிக்கை எடுக்காத பெண் வார்டன் ஆகியோர் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி, மேலப்பாளையத்தில் ஒரு தொண்டு நிறுவனம் சார்பில், அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கான விடுதி உள்ளது.
இங்கு, 15 பேர் தங்கியுள்ளனர். இங்கு பணிபுரியும் வார்டன் அபுபக்கர், 46, என்பவர், 14 வயது மாணவியிடம் தவறான முறையில் நடந்து கொண்டார்.
அம்மாணவி, விடுதி யின் பெண் வார்டன் வகிதா, 43, என்பவரி டம் தெரிவித்தும், அவர், 'யாரிடமும் சொல்லாதே' என கூறியுள்ளார்.
மாணவி, தன் பெற் றோரிடம் கூறினார். பெற்றோர் புகாரில், திருநெல்வேலி போலீ சார், அபுபக்கர், வகிதா ஆகிய இரு வரையும் போக்சோவில் கைது செய்தனர்.