ADDED : செப் 22, 2025 03:57 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி -- கன்னியாகுமரி நான்குவழிச்சாலையில் வள்ளியூர் அருகே காலி யிடத்தில் 2 அடி உயரத்தில் ஆஞ்சநேயர் சிலையுடன் கோயில் அமைக்கப்பட்டிருந்தது.
விழா நாட்களில் அப்பகுதி மக்கள் வழிபடுவர். இந்நிலையில் நேற்றுகாலை மர்ம நபர்கள் கோயிலில் இருந்த ஆஞ்சநேயர் சிலையை இடித்து தரை மட்டமாக்கினர். சிசிடிவி காட்சிகள் மூலம் மர்ம நபர்களை வள்ளியூர் போலீசார் தேடி வருகின்றனர்.