Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ வினாத்தாள் கசிந்த விவகாரம் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு

வினாத்தாள் கசிந்த விவகாரம் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு

வினாத்தாள் கசிந்த விவகாரம் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு

வினாத்தாள் கசிந்த விவகாரம் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு

ADDED : ஜூன் 01, 2025 02:52 AM


Google News
திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில், மே 27ல் பி.காம்., மாணவர்களுக்கான 'இன்டஸ்ட்ரியல் லா' தேர்வு நடக்க இருந்தது. தேர்வு துவங்க இருந்த சில நிமிடங்களில், ஏற்கனவே வினாத்தாள் கசிந்து விட்டதாகக் கூறி, அனைத்து கல்லுாரிகளிலும் தேர்வு ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து குற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பல்கலை பதிவாளர் சாக்ரடீஸ், பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.

மே 27 காலை நடக்க இருந்த இன்டஸ்ட்ரியல் லா தேர்வு வினாத்தாள் பிரதியை, அதற்கு முதல்நாள் மே 26 இரவில், பல்கலை தேர்வாணையர் பாலசுப்பிரமணியத்தின் வாட்ஸாப்பிற்கு ஒரு நபர் அனுப்பியுள்ளார்.

பேட்டை போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதற்கிடையே, தேர்வாணையர் வாட்ஸாப்பிற்கு வினாத்தாள் அனுப்பிய எண் குறித்து போலீசார் சோதனை செய்தபோது, மதுரையை சேர்ந்த அறிவுச்செல்வன் என்பவரின் மொபைல்போன் எண் என, தெரியவந்தது. அவர் குறித்தும் விசாரணை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us