/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ நெல்லையப்பர் கோயில் தேருக்கு 200 கிலோ வெள்ளி வழங்கல் நெல்லையப்பர் கோயில் தேருக்கு 200 கிலோ வெள்ளி வழங்கல்
நெல்லையப்பர் கோயில் தேருக்கு 200 கிலோ வெள்ளி வழங்கல்
நெல்லையப்பர் கோயில் தேருக்கு 200 கிலோ வெள்ளி வழங்கல்
நெல்லையப்பர் கோயில் தேருக்கு 200 கிலோ வெள்ளி வழங்கல்
ADDED : ஜூன் 02, 2025 04:40 AM

திருநெல்வேலி:திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் வெள்ளித்தேர் பழுதுபட்டிருந்ததால் புதிய தேர் செய்யும் பணி நடக்கிறது. 450 கிலோ வெள்ளி தேவைப்படுகிறது. ஏற்கனவே இருந்த வெள்ளி, உபயதாரர்கள் வழங்கிய வெள்ளி என 150 கிலோ 412 கிராம் வெள்ளி கையிருப்பில் உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அறங்காவலர் குழு தலைவர் கே.எம். சுப்பிரமணியன் 100 கிலோ வெள்ளி, அறங்காவலர்கள் தனசேகர் 50 கிலோ, ஜி .ஆர் .பாலசுப்ரமணியம் 50 கிலோ என மொத்தம் 200 கிலோ வெள்ளிக்கட்டிகள் வழங்கினர். இதற்கான விழா கோயிலில் நடந்தது. சபாநாயகர் அப்பாவு, கலெக்டர் சுகுமார், அறங்காவலர் குழு தலைவர் செல்லையா பங்கேற்றனர்.