Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிய மனைவி

கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிய மனைவி

கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிய மனைவி

கொதிக்கும் எண்ணெயை கணவர் மீது ஊற்றிய மனைவி

ADDED : ஜூன் 01, 2025 02:49 AM


Google News
Latest Tamil News
திருநெல்வேலி: திருநெல்வேலி -- திருச்செந்துார் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் வசிப்பவர் பாலசுப்ரமணியன், 42; ஆட்டோ டிரைவர். இவருக்கும், துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி, 36, என்பவருக்கும் 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.

பாலசுப்ரமணியன் அதே பகுதியில், வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். வீட்டு செலவுக்கு சரிவர பணம் தரவில்லை என, கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. 15 தினங்களுக்கு முன் முத்துலட்சுமி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். பேச்சு நடத்தி கணவர் வீட்டுக்கு வந்தார். இருப்பினும் கணவர், அந்த பெண்ணுடன் தொடர்பை நிறுத்திக்கொள்ளாததால் ஆத்திரமுற்றார். அதிகாலை, 3:30 மணியளவில் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த கணவரை எழுப்பி, காய்ச்சிய எண்ணையை அவரது வயிற்றுப்பகுதியில் கொட்டினார்.

பலத்த காயமுற்ற பாலசுப்ரமணியன், திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முத்துலட்சுமியை சிவந்திபட்டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us