ADDED : ஜூன் 19, 2024 01:53 AM
களக்காடு:களக்காட்டில் கரடி கடித்து பெண் பலத்த காயம் அடைந்தார்.
களக்காடு கக்கன்நகரை சேர்ந்தவர் பவானி,55. கூலித் தொழிலாளி. தோட்டத்தில் மாடுகளுக்கு புல் அறுத்துக் கொண்டிருந்தார். வாழை மரங்களுக்கு இடையில் பதுங்கியிருந்த கரடி, பவானி மீது பாய்ந்தது. அவரை ஓடஓட விரட்டி, கடித்துக் குதறியது. படுகாயமடைந்த பவானி ரத்தம் சொட்டச் சொட்ட வீட்டுக்கு நடந்தே வந்தார். உறவினர்கள் அவரை களக்காடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஊருக்குள் திரியும் கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.