ADDED : ஜூன் 19, 2024 02:19 AM
திருநெல்வேலி:தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே எஸ்.வி.புரத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மனைவி தமிழ்செல்வி 32. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
தமிழ்செல்வி நீதித்துறையில் முன் எழுத்தராக பணிபுரிந்தார். பின் அரசு தேர்வு எழுதி ஹிந்து அறநிலையத்துறையில் செயல் அலுவலராகபணியில் சேர்ந்தார். தற்போது திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி அம்மநாத சுவாமி கோயில் செயல் அலுவலராக பணிபுரிந்து வருகிறார்.
கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தமிழ்செல்வி தனியாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் குழந்தைகளை குளத்தூரில் உள்ள தந்தை கருப்பசாமி வீட்டில் விட்டு விட்டு வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கருப்பசாமி குளத்தூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி விசாரித்தார்.
தமிழ்செல்வி நேற்று முன்தினம் மாலை கலைஞானபுரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு அரசு பஸ்சில் சென்றதை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். அவர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.