/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ மாஞ்சோலை தேயிலை தோட்டம் அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல் மாஞ்சோலை தேயிலை தோட்டம் அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்
மாஞ்சோலை தேயிலை தோட்டம் அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்
மாஞ்சோலை தேயிலை தோட்டம் அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்
மாஞ்சோலை தேயிலை தோட்டம் அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்
ADDED : ஜூன் 07, 2024 08:43 PM
திருநெல்வேலி,:'மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசின், டான் டீ நிறுவனம் ஏற்று நடத்த வேண்டும் என, முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் தலைமையில் அனைத்துக் கட்சி குழுவினர், திருநெல்வேலி கலெக்டரிடம் வலியுறுத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை மும்பையைச் சேர்ந்த பி.பி.டி.சி., நிறுவனம், 1929 பிப்., முதல் 99 ஆண்டுகள் குத்தகைக்கு நடத்தி வருகிறது. 2028ல் குத்தகை முடிவுக்கு வருகிறது. தற்போது எஸ்டேட்டை காலி செய்ய முடிவு செய்துள்ளனர்.
எனவே விருப்ப ஓய்வு திட்டத்தில் தொழிலாளர்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர். தோட்டத் தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றுவதால் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
இது தொடர்பாக, திருநெல்வேலியில் அனைத்து கட்சியினர் கூடி விவாதித்தனர். தி.மு.க., மாவட்ட செயலர் ஆவுடையப்பன் தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள், 20 பேர் நேற்று மாலை திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயனிடம் மனு அளித்தனர்.
'தொழிலாளர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றக் கூடாது. எஸ்டேட்டை தமிழக அரசின் டான் டீ நிறுவனம் ஏற்று நடத்த வேண்டும்' என கோரிக்கை வைத்தனர். இன்று அனைத்து கட்சி குழுவினர் மாஞ்சோலை சென்று, தொழிலாளர்களை சந்திக்கின்றனர்.