/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ மாஞ்சோலை எஸ்டேட் அடமானம்; அனுமதித்த பதிவாளர் சஸ்பெண்ட் மாஞ்சோலை எஸ்டேட் அடமானம்; அனுமதித்த பதிவாளர் சஸ்பெண்ட்
மாஞ்சோலை எஸ்டேட் அடமானம்; அனுமதித்த பதிவாளர் சஸ்பெண்ட்
மாஞ்சோலை எஸ்டேட் அடமானம்; அனுமதித்த பதிவாளர் சஸ்பெண்ட்
மாஞ்சோலை எஸ்டேட் அடமானம்; அனுமதித்த பதிவாளர் சஸ்பெண்ட்
ADDED : ஜூன் 10, 2024 12:38 AM
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உள்ளது.
கடந்த 2015 ஜூன் 15ல் பி.பி.டி.சி., நிர்வாகம் 8,373 ஏக்கர் எஸ்டேட் நிலத்தை அடமானம் வைத்து, சென்னையில் உள்ள ஹெச்.டி.எப்.சி., வங்கியில் 50 கோடி ரூபாய் அடமான கடன் பெற்றுள்ளனர்.
இதற்கு, கல்லிடைக்குறிச்சியில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில் ஒப்பந்தம் பதிவாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், நிலம் தமக்கு சொந்தமானது எனக் கூறி, பி.பி.டி.சி., நிர்வாகம் தற்போது அரசிடம் உரிமை கொண்டாடுகிறது.
இதனால் அதிர்ச்சியடைந்த, தமிழக அரசின் நில நிர்வாக ஆணையர் இதுகுறித்து விசாரிக்க உத்தரவிட்டார்.
பத்திரப்பதிவுத்துறை ஐ.ஜி., தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், விசாரணை மேற்கொண்டார். அதில் அரசு நிலம் எதற்காக குத்தகைக்கு தரப்பட்டதோ அந்த செயலில் மட்டுமே ஈடுபட முடியும். எனவே பி.டி.டி.சி., நிர்வாகம் தேயிலை தோட்டத்தை மட்டுமே நடத்த முடியும்.
நிலத்தின் பெயரில் அடமான கடன் பெற முடியாது என்பதால் அதற்கு அனுமதி அளித்து, ஒப்பந்தத்திற்கு உதவிய கல்லிடைக்குறிச்சி சார் - பதிவாளர் சாந்தியை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.
சாந்தி, தற்போது துாத்துக்குடியில் சார் - பதிவாளராக பணியாற்றுகிறார்.