/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ கொலை முயற்சி வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம் கொலை முயற்சி வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்
கொலை முயற்சி வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்
கொலை முயற்சி வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்
கொலை முயற்சி வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்
ADDED : ஜூன் 07, 2024 08:32 PM
திருநெல்வேலி:திருநெல்வேலியில், சமூக ஆர்வலர் பெர்டின்ராயனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற வழக்கில், திண்டுக்கல் தாஜுதீன் உட்பட இருவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திருநெல்வேலியை சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்டின் ராயன், 35. மே 4ல், ஒரு தரப்பினரால் சரமாரியாக அரிவாளால் வெட்டப்பட்டார். தற்போது சிகிச்சையில் உள்ளார். திருநெல்வேலி மேலப்பாளையம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடந்த முறைகேடான பத்திரப்பதிவுகள் குறித்து புகார் செய்ததால் ஆத்திரமுற்ற கும்பல் அவரை கொலை செய்ய முயன்றது தெரிந்தது.
இதில் மேலப்பாளையத்தை சேர்ந்த முள்ளான் சையது அலி என்பவர் ஏற்கனவே கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் உள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் பேகம்பூரை சேர்ந்த தாஜுதீன், 26, மேலப்பாளையம் அப்துல் அஜீஸ், 30, ஆகியோர் நேற்று திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த சாகுல் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.