/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி; உயர்நீதிமன்றம் உத்தரவு ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி; உயர்நீதிமன்றம் உத்தரவு
ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி; உயர்நீதிமன்றம் உத்தரவு
ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி; உயர்நீதிமன்றம் உத்தரவு
ஏர்வாடியில் சந்தனக்கூடு விழா நடத்த அனுமதி; உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : ஜூலை 17, 2024 12:37 AM
மதுரை : திருநெல்வேலி ஏர்வாடி மொகரம் விழாவில் இசைத்தல், ஊர்வலம் மற்றும் 'குதிரை பாஞ்சா' சடங்குகளை நடத்த தவ்ஹீத் ஜமாத் ஆட்சேபனை எழுப்பியது.
இதுதொடர்பாக கமிட்டி தலைவர் தமீம் ஜிந்தா மதார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மொகரம் பண்டிகையையொட்டி ஏர்வாடியில் சந்தனக்கூடு மற்றும் 'குதிரை பாஞ்சா' ஊர்வலங்களின் போது மேள தாளங்களுடன் செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மனு செய்தார்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தவ்ஹீத் குழுவினர் தங்கள் சொந்த நம்பிக்கைகளை நிலைநிறுத்த உரிமை பெற்றுள்ளனர்.
அவர்கள் இஸ்லாத்தை பின்பற்றும் மற்றவர்களை தடுக்கும் போது பிரச்னை எழுகிறது.
தவ்ஹீத் ஜமாத்தினர்களுக்கு சந்தனக்கூடு ஊர்வலம் அல்லது 'குதிரை பாஞ்சா' பிடிக்கவில்லை எனில், அவர்கள் பங்கேற்க தேவையில்லை.
மனு அனுமதிக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.