Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில் 

திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில் 

திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில் 

திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தாவுக்கு சிறப்பு ரயில் 

ADDED : ஜூலை 17, 2024 12:40 AM


Google News
Latest Tamil News
மதுரை : திருநெல்வேலியில் இருந்து கொல்கத்தா ஷாலிமார் ஸ்டேஷனுக்கு முன்பதிவு இல்லாத 17 பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி - ஷாலிமார் வாராந்திர சிறப்பு ரயில் (06087) திருநெல்வேலியில் ஜூலை 18, 25 வியாழக்கிழமைகளில் அதிகாலை 1:50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் இரவு 9:00 மணிக்கு ஷாலிமார் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் ஷாலிமார் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் (06088) ஷாலிமாரில் ஜூலை 20, 27 சனிக்கிழமைகளில் மாலை 5:10 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 1:15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். இந்த ரயில்களில் 2 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 17 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 ரயில் மேலாளர் பெட்டியுடன் கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.

கோவில்பட்டி, விருது நகர், மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார், காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், நெல்லுார், ஓங்கோல், விஜயவாடா, எலுரு, ராஜமுந்திரி, சாமல் கோட், துவ்வாடா, சிமாச்சலம் வடக்கு, பென்டுர்டி, கோட்ட வலசா, விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ரோடு, பலாசா, பிரம்மாபூர், குர்தா ரோடு, புவனேஸ்வர், கட்டாக், ஜஸ்பூர் கியான்ஸ்ஹர், பட்ரக், பாலேஸ்வர், கரக்பூர், சந்தர காச்சி ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

இந்த ரயில்களிலுள்ள இரண்டு படுக்கை வசதி பெட்டிகளுக்கான முன்பதிவு நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us