/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ உணவு ஒவ்வாமையால் இன்ஜி., மாணவி இறப்பு உணவு ஒவ்வாமையால் இன்ஜி., மாணவி இறப்பு
உணவு ஒவ்வாமையால் இன்ஜி., மாணவி இறப்பு
உணவு ஒவ்வாமையால் இன்ஜி., மாணவி இறப்பு
உணவு ஒவ்வாமையால் இன்ஜி., மாணவி இறப்பு
ADDED : ஜூன் 16, 2024 02:00 AM
திருநெல்வேலி:சென்னை இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து வரும் மாணவி உணவு ஒவ்வாமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.
திருநெல்வேலி டவுன் கோடீஸ்வரன் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இன்ஜினியர். மகள் மாரிச்செல்வி 21, சென்னையில் தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியில் படித்து வந்தார். அவருக்கு உணவு ஒவ்வாமையால் உடல் நலம் பாதிக்கப்பட்டது.
எனவே திருநெல்வேலி வந்திருந்தார். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் மீண்டும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. திருநெல் வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார். பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.