/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ பெண் மீது மிளகாய் பொடி துாவி 9 பவுன் நகை பறிப்பு பெண் மீது மிளகாய் பொடி துாவி 9 பவுன் நகை பறிப்பு
பெண் மீது மிளகாய் பொடி துாவி 9 பவுன் நகை பறிப்பு
பெண் மீது மிளகாய் பொடி துாவி 9 பவுன் நகை பறிப்பு
பெண் மீது மிளகாய் பொடி துாவி 9 பவுன் நகை பறிப்பு
ADDED : ஜூன் 16, 2024 02:01 AM

திருநெல்வேலி:வள்ளியூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணின் மீது முகமூடி நபர் மிளகாய் பொடி துாவி 9 பவுன் நகையை பறித்துச் சென்றார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே தெற்கு கள்ளிகுளத்தை சேர்ந்தவர் சிறில். தெற்கு சூடானில் பணிபுரிகிறார். இவரது மனைவி ரோனிகா. வீட்டில் தனியாக இருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் காம்பவுண்ட் ஏறி குதித்து வந்து ரோனிகா மீது மிளகாய் பொடி துாவி அவர் அணிந்திருந்த 9 பவுன் நகையை பறித்து சென்றார்.
அவரது வீட்டு சிசிடிவியில் பதிவான காட்சிகளை கொண்டு வள்ளியூர் போலீசார் விசாரிக்கின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில் ஆசிரியை ஒருவரிடம் முகவரி கேட்பது போல பேசி 7 பவுன் நகையை பறித்து சென்றனர். அந்த சம்பவத்தில் இன்னும் துப்பு துலங்கவில்லை.