/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் தொழிலாளர்கள் தயார்ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் தொழிலாளர்கள் தயார்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் தொழிலாளர்கள் தயார்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் தொழிலாளர்கள் தயார்
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் தொழிலாளர்கள் தயார்
ADDED : ஜன 01, 2024 06:03 AM

மூணாறு: மூணாறில் ஆங்கிலேயர் கால பாணியில் தொழிலாளர்கள் இன்று ஆங்கில புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.
மூணாறைச் சுற்றியுள்ள தேயிலைத் தோட்டங்களை ஆரம்ப காலத்தில் ஆங்கிலேயர்கள் நிர்வகித்தனர். அவர்களின் சில பழக்க, வழக்கங்களை தொழிலாளர்களான தமிழர்கள் பல தலைமுறைகளாக கடை பிடித்து வருகிறனர்.
அதன்படி ஆங்கில புத்தாண்டு வினோதமாக கொண்டாடப்படுகிறது. புத்தாண்டு அன்று தொழிலாளர்கள் ஆங்கிலேயர்களுக்கு எலுமிச்சை பழம் கொடுத்து மரியாதை செலுத்தினர்.
ஆங்கிலேயர்கள் சென்ற பிறகும் தோட்டங்களை நிர்வாகிக்கும் அதிகாரிகளை புத்தாண்டு நாளில் அதிகாலை பழ வகைகள், கேக் உள்பட இனிப்பு வகையுடன் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால் புத்தாண்டு நாளின் முதல் நாள் நகரில் பழம், பூ, மாலை, கேக் ஆகியவற்றின் தற்காலிக கடைகள் ஏராளம் முளைக்கும். இந்தாண்டும் வழக்கம் போல் ஏராளமான கடைகள் முளைத்து விற்பனை களை கட்டியது. அவற்றை வாங்கிச் சென்ற தொழிலாளர்கள் இன்று ஆங்கில கால பாணியில் புத்தாண்டை கொண்டாடுகின்றனர்.