எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல்
எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல்
எத்தியோப்பியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல்

முரணாக பதில்
இதையடுத்து விமானத்தில் வந்தவர்களில், சந்தேகத்திற்குரிய நபர்களை நிறுத்தி விசாரித்தனர். அப்போது, ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தராகண்ட் மாநிலங்களை சேர்ந்த, இரு பயணியர் அடிக்கடி வெளிநாடு சென்று திரும்பியது தெரிய வந்தது. அவர்களை விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
நாடகமாடினர்
விசாரணையில், இருவருக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் உட்பட மேலும் இருவரை கைது செய்தனர்.
இது குறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தங்கம் கடத்தலில், தற்போது அதிக கமிஷன் கிடைப்பதில்லை. இதனால், வெளிநாடுகளில் உள்ள கடத்தல் கும்பல், 'சிந்தடிக்' போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட துவங்கி உள்ளது. தென் கிழக்கு ஆசியாவில், குறிப்பிட்ட சில நாடுகளில், ஆட்களை நிர்ணயித்து கடத்தலில் ஈடுபடுகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள இருவரும், முதல் முறை கடத்தலில் ஈடுபடுவது போல நாடகமாடினர்.