/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஜூன் 15ல் தேனி வரும் துணை முதல்வருக்கு வரவேற்பு ஜூன் 15ல் தேனி வரும் துணை முதல்வருக்கு வரவேற்பு
ஜூன் 15ல் தேனி வரும் துணை முதல்வருக்கு வரவேற்பு
ஜூன் 15ல் தேனி வரும் துணை முதல்வருக்கு வரவேற்பு
ஜூன் 15ல் தேனி வரும் துணை முதல்வருக்கு வரவேற்பு
ADDED : ஜூன் 13, 2025 03:09 AM
தேனி: தேனியில் வடக்கு மாவட்ட தி.மு.க., ஆலோசனை கூட்டம் மாவட்டச் செயலாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில் அமைச்சர் பெரியசாமி பேசுகையில், 'ஜூன் 15ல் தேனி வரும் தமிழக துணை முதல்வர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கவும், ஜூன் 16 காலையில் ஆய்வுக்கூட்டம், தேனி ஒன்றியம் அலுவலகத்தில் எம்.பி., அலுவலகத்தை திறந்துவைக்கிறார்.தர்மாபுரியில் 23 சார்பு அணி நிர்வாகிகளுடன் சட்டசபை தேர்தல் குறித்த ஆலோசனை நடத்துகிறார் என்றார். கூட்டத்தில் பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார், மாவட்ட துணைச் செயலாளர்கள் செந்தில்முருகன், திருக்கண்ணன், மாவட்டப் பொருளாளர் சுரேஷ், தேனி வடக்கு நகர பொறுப்பாளர் பாலமுருகன்,தெற்கு நகரப் பொறுப்பாளர் நாராயணப்பாண்டியன், நகராட்சி தலைவர்கள் ரேணுப்பிரியா, சுமிதா, ராஜேஸ்வரி பங்கேற்றனர்.