ADDED : ஜூன் 13, 2025 03:10 AM
தேனி: தேனி நகராட்சி பகுதிகளில் கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் ஸ்டாண்ட், காமராஜர் நினைவு பஸ் ஸ்டாண்ட், நகர் பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் மன நலம் பாதித்து சுற்றித்திரிந்த 8 ஆண்கள், 3 பெண்கள் என 11பேரை மீட்டு, அவர்களை குளிக்க வைத்து, புத்தாடைகள் அணிந்து பெரியகுளம் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
நேற்று இப்பணிகள் மாவட்ட மனநல டாக்டர் கோரா. ராஜேஷ் தலைமையில், மருந்தாளுனர் ரஞ்ஜீத்குமார், மன நல ஆலோசகர்கள் ரமேஷ்குமார், செல்லபாண்டி, சபரிநாதன் ஆகியோர் தலைமையில் நடந்தன. மீட்கப்பட்ட 7 பேருக்கும் உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு, மனநல காப்பக சிகிச்சை மையத்தில் சேர்க்கப்பட்டனர்.