சுற்றுலா பயணி மயங்கி விழுந்து பலி
சுற்றுலா பயணி மயங்கி விழுந்து பலி
சுற்றுலா பயணி மயங்கி விழுந்து பலி
ADDED : மே 29, 2025 03:14 AM
மூணாறு: மும்பையைச் சேர்ந்தவர் வினீத்பட்டேல் 43. இவர் உள்பட ஒன்பது பேர் கொண்ட குழு மே 25ல் மூணாறுக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் பழைய மூணாறு பகுதியில் தனியார் தங்கும் விடுதியில் தங்கினர்.
அங்கு மே 26ல் காலை திடீரென உடல் நிலை பாதிக்கப்பட்டு வினீத்பட்டேல் மயங்கி விழுந்தார். அவரை ஆலுவாவில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.