ADDED : மே 29, 2025 03:14 AM
பெரியகுளம்: பெரியகுளம் வடகரை புதுபஸ்ஸ்டாண்ட் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி. தென்கரையில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார்.
கடையில் விற்பனைக்கான துணி பண்டல்களை வீட்டின் மாடி அறையில் வைத்திருந்தார். அறையில் திடீரென தீ பரவியது. பெரியகுளம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக தீ பரவியதா அல்லது வேறு காரணமா என வடகரை போலீசார் விசாரிக்கின்றனர்.