/உள்ளூர் செய்திகள்/தேனி/ தி.மு.க., சார்பில் மாநில அளவில் 2ம் நாள் கபடி போட்டி தி.மு.க., சார்பில் மாநில அளவில் 2ம் நாள் கபடி போட்டி
தி.மு.க., சார்பில் மாநில அளவில் 2ம் நாள் கபடி போட்டி
தி.மு.க., சார்பில் மாநில அளவில் 2ம் நாள் கபடி போட்டி
தி.மு.க., சார்பில் மாநில அளவில் 2ம் நாள் கபடி போட்டி
ADDED : மே 29, 2025 03:15 AM

தேனி: தேனியில் தி.மு.க., வடக்கு மாவட்டம் சார்பில் நடந்து வரும் மாநில அளவிலான கபடி போட்டிகளை, ராஜ்யசபா தி.மு.க., குழு தலைவர் சிவா துவக்கி வைத்தார்.
தி.மு.க., வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட விளையாட்டு அரங்கில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் விழாக்களை முன்னிட்டு மாநில அளவிலான ஏ கிரேடு கபடி போட்டிகள் நடக்கிறது. போட்டிகளில் சேலம், தேவாரம், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து அணிகள் பங்கேற்றுள்ளன. பெண்கள், ஆண்கள் பிரிவில் போட்டிகள் நடந்து வருகிறது.
இரண்டாம் நாள் போட்டிகளை தி.மு.க., துணைப்பொதுச்செயலாளர் சிவா துவக்கி வைத்தார். தேனி எம்.பி., தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். பெரியகுளம் எம்.எல்.ஏ., சரவணக்குமார் முன்னிலை வகித்தார். இறுதி போட்டிகள், பரிசு வழங்கும் விழா இன்று நடக்கிறது.