/உள்ளூர் செய்திகள்/தேனி/தேனி மாரத்தான் போட்டி குளறுபடிதி.மு.க., அமைப்பாளர் மீது வழக்குதேனி மாரத்தான் போட்டி குளறுபடிதி.மு.க., அமைப்பாளர் மீது வழக்கு
தேனி மாரத்தான் போட்டி குளறுபடிதி.மு.க., அமைப்பாளர் மீது வழக்கு
தேனி மாரத்தான் போட்டி குளறுபடிதி.மு.க., அமைப்பாளர் மீது வழக்கு
தேனி மாரத்தான் போட்டி குளறுபடிதி.மு.க., அமைப்பாளர் மீது வழக்கு
ADDED : பிப் 06, 2024 03:14 AM

தேனி: தேனியில் நேற்று முன் தினம் நடந்த மாரத்தான் போட்டி நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான கோம்பை தி.மு.க., தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டீபன்ராஜ் உள்ளிட்ட சிலர் மீது ரூ.30 லட்சம் மோசடி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
போடி காமராஜபுரம் காளியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர்வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் 55. இவர் கோம்பையைச் சேர்ந்த தி.மு.க., தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஸ்டீபன்ராஜ், 'பெரிக்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி' சார்பில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்க முடிவு செய்தார்.
அகாடமி விளம்பர பேனர்களில் இருந்த விபரங்களை கவனித்து ஸ்டீபன்ராஜின் அலைபேசியில் தொடர்பு கொண்டு போட்டி விதிகளை கேட்டார்.
ஸ்டீபன்ராஜ் அறிவுறுத்தலின்படி ரூ.300 முன்பதிவு பணத்தை போட்டி ஏற்பாடு செய்த அட்மின் நிர்வாகிகள் கூறிய மூன்று அலைபேசி எண்கள் மூலம் பணத்தை செலுத்தினார். அவருக்கு '554' செஸ்ட் எண் வழங்கப்பட்டது. இதுபோல 1 முதல் 13,323 எண்கள் வரை செஸ்ட் நம்பர்'கள் வழங்கி முன்பணமாக ரூ.30 லட்சத்துக்கு மேல் பெற்றுள்ளனர்.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் தேனி போலீசில் அளித்த புகாரில் கூறியுள்ளதாவது:
போட்டி நடந்த பங்களாமேட்டிற்கு பிப்., 5 காலை என்னுடன் பல்வேறு ஊர்களை சேர்ந்த வீரர்கள், வீராங்கனைகள் சென்றோம்.
அங்கு குடிநீர், உணவு, கழிப்பறை, முதலுதவிக்கான ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திடவில்லை. ஏற்பாட்டாளர்களை அலைபேசியில் அழைத்தால் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.
பரிசுகளாக வழங்கப்பட வேண்டிய சைக்கிள்களும் குறைந்த அளவில் தரப்படும் என ஏற்பட்டாளர்கள் தெரிவித்ததால் மறியல் நடந்தது. இதனால் ஏற்பாட்டாளர்கள் அங்கிருந்து ஓடினர். மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்க வந்திருந்த பலர் சிரமத்திற்கு ஆளானோம்.
ரூ.30 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்த தி.மு.க., இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஸ்டீபன்ராஜ், ஏற்பாடு செய்திருந்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.ஐ., ஜீவானந்தத்திடம் புகார் அளித்தார். ஸ்டீபன்ராஜ், ஏற்பாட்டாளர்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வி.சி., மண்டல செயலாளர் தமிழ்வாணன் வெளியிட்ட அறிக்கை: மாரத்தான் போட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தராத போட்டி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.