Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/கம்பம் மெயின் ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு பொதுமக்கள் முகம் சுளிப்பு

கம்பம் மெயின் ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு பொதுமக்கள் முகம் சுளிப்பு

கம்பம் மெயின் ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு பொதுமக்கள் முகம் சுளிப்பு

கம்பம் மெயின் ரோட்டில் தேங்கும் கழிவுநீரால் சுகாதாரக்கேடு பொதுமக்கள் முகம் சுளிப்பு

ADDED : ஜன 07, 2024 07:21 AM


Google News
Latest Tamil News
கம்பம்: கம்பம் மெயின் ரோட்டில் சாக்கடை கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் ரோட்டில் செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் மூக்கை மூடிசெல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கம்பம் நகராட்சியில் பொதுச் சுகாதார பணிகள் தனியார் மயமாக்கப்பட்டு குப்பை அகற்றப்படுகிறது. நகரில் சாக்கடை சுத்தம் செய்வதில் சுணக்கம் உள்ளது.

கூலத்தேவர் முக்கு, நாட்டுக்கல் விதிகள், காந்திஜி வீதி உள்ளிட்ட பல வீதிகளில் சேகரமாகும் கழிவு நீர், தியாகி வெங்கடாச்சலம் வீதி வழியாக வருகிறது.

தியாகி வெங்கடாச்சலம் வீதியில் உள்ள 7 க்கும் மேற்பட்ட குறுக்கு வீதிகளில் சேகரமாகும் கழிவு நீரும் பெரிய சாக்கடை வழியாக மெயின்ரோட்டிற்கு வருகிறது.

இக் கழிவுநீர் ரோட்டில் உள்ள சிறிய பாலம் வழியாக கடந்து காந்தி சிலையை ஒட்டியுள்ள ஐயப்பன் கோயில், திருமண மண்டபம் வழியாக சுருளிப்பட்டி ரோட்டிற்கு சென்று, கண்மாயில் சங்கமமாகிறது. கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக சாக்கடை கழிவு நீர் செல்லமுடியாமல் மெயின்ரோட்டில் தேங்கி நிற்கிறது.

கழிவு நீர் தேங்கும் இடத்தில் இடத்தில் குடிநீர் குழாய்களும் உள்ளது. இதனால் கழிவுநீர் குடிநீரில் கலப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த வழியாக சபரிமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களும், பொதுமக்களும், வாகன ஒட்டிகளும் மூக்கை மூடிச்செல்ல வேண்டிய அளவிற்கு துர்நாற்றம் வீசுகிறது. தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீரில் பல ஊர்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள், வால்வுகள் உள்ளது. நகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் இணைந்து, சாக்கடை கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து பொதுமக்கள் கருத்து:

தொ ற்று நோய் பரவும் அபாயம்


ரவிராம், யோகா ஆசிரியர், கம்பம் : மெயின்ரோட்டில் தேங்கும் சாக்கடை கழிவு நீரை முதலில் வெளியேற்ற வேண்டும். நீண்ட நாளாக தேங்கிய கழிவு நீரால் கடைக்காரர்களும், நடந்து செல்லும் பொதுமக்களும் அவதிப்படுகின்றனர். கடந்த ஒரு மாதமாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஆயிரக்கணக்கான லிட்டர் தேங்கி நிற்பது தொற்று நோய்களை ஏற்படுத்தும்.

கழி வுநீரி ல் குடிநீர் குழாய்கள்


குமார், சமூக ஆர்வலர், கம்பம்: சாக்கடை கழிவு நீர் பல நாட்களாக காந்தி சிலை அருகில் தேங்கி நிற்கிறது.

பல ஊர்களுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள், சாக்கடை கழிவு நீரில் மூழ்கி உள்ளன.

கழிவு நீர் உறிஞ்சும் வாகனம் மூலம் உறிஞ்சி அகற்ற வேண்டும். கழிவு நீர் தேங்கிட என்ன காரணம் என்பதை கண்டறிந்து நிரந்தர தீர்வாக சரி செய்ய வேண்டும்.

பக்தர்கள் முகம் சுளிப்பு


பூமிநாதன், ஆசிரியர், கம்பம்: தேக்கடிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளும், சபரிமலைக்கு செல்லும் பக்தர்களும் தினமும் நூற்றுக்கணக்கில் இந்த மெயின் - ரோடு வழியாக செல்கின்றனர்.

சாக்கடை கழிவு நீர் மெயின்ரோட்டில் தேங்கி நிற்பது கண்டு முகம் சுளித்து செல்கின்றனர். கழிவு நீரை அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாலத்திற்கு கீழ் அடைப்பு


அய்யனார், நகராட்சி பொறியாளர், கம்பம்: மெயின் ரோட்டில் கழிவு நீர் தேங்கி நிற்பதை அகற்ற ஏற்கெனவே நடவடிக்கை எடுத்தோம்.

ஆனால் மெயின் ரோட்டில் உள்ள பாலம் அமைத்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால், பாலத்திற்கு கீழ் அடைப்பு உள்ளது. பாலத்தை இடித்து நெடுஞ்சாலைத்துறை தான் வேலை செய்ய வேண்டும்.

நடவடிக்கை


ராஜா, உதவி செயற்பொறியாளர் நெடுஞ்சாலைத் துறை, கம்பம் : இப் பிரச்னை தொடர்பாக இதுவரை எனக்கு யாரும் தகவல் கூறவில்லை.

மெயின்ரோடு என்பதால் முதலில் கழிவு நீரை வெளியேற்ற வழி காண வேண்டும். பாலம் கட்ட வேண்டுமா என்பதை நேரில் ஆய்வு செய்து முடிவு செய்யலாம் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us