/உள்ளூர் செய்திகள்/தேனி/போஸ்ட் ஆபீஸ்களில் தங்கப்பத்திரம் விற்பனைபோஸ்ட் ஆபீஸ்களில் தங்கப்பத்திரம் விற்பனை
போஸ்ட் ஆபீஸ்களில் தங்கப்பத்திரம் விற்பனை
போஸ்ட் ஆபீஸ்களில் தங்கப்பத்திரம் விற்பனை
போஸ்ட் ஆபீஸ்களில் தங்கப்பத்திரம் விற்பனை
ADDED : பிப் 11, 2024 01:47 AM
தேனி: ரிசர்வ் வங்கி தபால் நிலையங்கள் மூலம் தங்கப்பத்திரம் விற்பனை திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்தாண்டு இத்திட்டம் பிப்.,12 முதல் பிப்.,16 வரை தேனி தபால் கோட்டத்தில் உள்ள அனைத்து தலைமை, துணை தபால் நிலையங்களில் நடக்கிறது. தனிநபர் ஒருவர் ஒரு கிராம் முதல் 4 கிலோ வரை தங்கப்பத்திரம் வாங்கலாம். ஒரு கிராம் விலையாக ரூ.6263 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் முதலீட்டுத்தொகை ஆண்டுக்கு 2.5 சதவீதம் கணக்கிடப்பட்டு 6 மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்படும். எட்டு ஆண்டுகள் கழித்து அன்றைய 24 கேரட் தங்கத்தின் விலைக்கு நிகரான முதிர்வுத் தொகை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தபால் நிலையம் அல்லது 99763 54800 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தேனி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பரமசிவம் தெரிவித்துள்ளார்.