மேற்குவங்கம்: தர்ணா செய்த இரு எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி பிரமாணம்
மேற்குவங்கம்: தர்ணா செய்த இரு எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி பிரமாணம்
மேற்குவங்கம்: தர்ணா செய்த இரு எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி பிரமாணம்
ADDED : ஜூலை 05, 2024 02:23 AM

கோல்கட்டா: மேற்குவங்க சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் இன்று கூடுகிறது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திரிணமுல் காங்., கட்சி இரு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
முன்னதாக ஆளும் திரிணமுல் காங்., புதிய எம்.எல்.ஏ.க்களாக சயந்திகா பந்தோபாத்யாய் மற்றும் ரயத் உசைன் சர்கார் ஆகியோர் கவர்னர் மாளிகைக்கு, பதவி பிரமாண நிகழ்ச்சியில் பங்கேற்க வரும்படி கவர்னர் ஆனந்த போஸ் அழைப்பு விடுத்தார். வராத சூழலில் 2 எம்.எல்.ஏ.க்களும் சட்டசபை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இன்று சட்டசபை சிறப்பு கூட்டம் நடக்கிறது.இதில் கவர்னர் உத்தரவின் பேரில் இரு எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.