/உள்ளூர் செய்திகள்/தேனி/'ஆயிலை' குறைத்தால் 'ஆயுள்'அதிகரிக்கும் பள்ளி விழாவில் பேராசிரியர் தகவல்'ஆயிலை' குறைத்தால் 'ஆயுள்'அதிகரிக்கும் பள்ளி விழாவில் பேராசிரியர் தகவல்
'ஆயிலை' குறைத்தால் 'ஆயுள்'அதிகரிக்கும் பள்ளி விழாவில் பேராசிரியர் தகவல்
'ஆயிலை' குறைத்தால் 'ஆயுள்'அதிகரிக்கும் பள்ளி விழாவில் பேராசிரியர் தகவல்
'ஆயிலை' குறைத்தால் 'ஆயுள்'அதிகரிக்கும் பள்ளி விழாவில் பேராசிரியர் தகவல்
ADDED : பிப் 12, 2024 05:44 AM
கம்பம்: 'உணவில் 'ஆயிலை' குறைத்தால் உங்கள் 'ஆயுள்' அதிகரிக்கும்.' என, கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்ற சென்னை எம்.ஜி.ஆர்., மருத்துவக் கல்லூரி இதய சிகிச்சை பிரிவு பேராசிரியர் சொக்கலிங்கம் பேசினார்.
இப்பள்ளி ஆண்டு விழா தாளாளர் காந்த வாசன் தலைமையில் நடந்தது. நிகழ்வில் பங்கேற்ற பேராசிரியர் சொக்கலிங்கம் பேசியதாவது : ஒரு மணி நேரத்தில் 90 பேர் 20 முதல் 25 வயதிற்கு உட்பட்டோர் மாரடைப்பு (ஹார்ட் அட்டாக்) மூலம் உயிரிழக்கின்றனர். எல்லா நோய்களும் மனதினால் ஏற்படுகிறது. வாழ்க்கை என்பது ஒரு இனிய பயணம். ஒரு கமா. அது முற்றுப்புள்ளி அல்ல.
மனதிலும், உடம்பிலும் பாரம் இருக்கக் கூடாது. மனதை இலகுவாக வைத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு உயிர் கொல்லி அல்ல. ரத்தக் குழாய்களில் ரத்தத்தில் செல்லும் கொழுப்பு உயிர் காக்கும். உங்கள் மனதை எதிர்மறை எண்ணங்கள், கவலைகள் ஏற்படும் போது, அந்த கொழுப்பு ரத்த குழாயில் படிந்து உங்கள் உயிர் பறிக்கிறது. எனவே மனதில் மகிழ்ச்சி இருந்தால் இது ஏற்படாது.
பரம்பரையாக இருந்தாலும் 9 ஆண்டுகள் சரியாக வாழ்க்கை முறையை கடைப்பிடித்தால் மாரடைப்பை தவிர்க்கலாம். ஒரு தலைமுறை என்பது நீங்கள் பிறந்த ஆண்டிற்கும், உங்களுக்கு முதலில் பிறக்கும் குழந்தையின் ஆண்டிற்கும் உள்ள இடைப்பட்ட காலமாகும். பிரச்னைகளை பற்றி கவலைப்பட கூடாது. பணம் வாழ்க்கைக்கு முக்கியம் தான். ஆனால் பணமே முக்கியமும் அல்ல. அரை வயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு காலியாக இருக்க வேண்டும்.
உணவு, உடற்பயிற்சி, நல்ல தூக்கம், மனதை கவலையில்லாமல் வைத்துக் கொள்வது.
எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பது. நேர்மறை எண்ணங்களால் மனது மகிழ வேண்டும். எதிர்மறை எண்ணங்கள் ஏற்படுவதை தவிர்த்தால் மாரடைப்பு வராது. முக்கியமாக உணவில் 'ஆயிலை' குறைத்தால், உங்களின் 'ஆயுள்' அதிகரிக்கும் என்றார். விழாவில் பள்ளியின் இணை செயலர் சுகன்யா, எம்.பி.எம்., மேல்நிலைப் பள்ளி தாளாளர் மகுட காந்தன், முதல்வர் புவனேஸ்வரி, துணை முதல்வர்கள் லோகநாதன், சரவணன், யோகா ஆசிரியர்கள் துரைராஜேந்திரன், ரவிராம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.