ADDED : பிப் 25, 2024 04:59 AM
நகை திருட்டு போலீஸ் விசாரனை
தேனி: ஸ்ரீரங்காபுரம் பெயிண்டர் ராஜேஷ் 43, இவரது ஊரில் சில நாட்களுக்கு முன் காளியம்மன் கோயில் திருவிழா நடந்தது. திருவிழாவிற்காக அவருடன் வேலை பார்க்கும் பழனிசெட்டிபட்டி செந்தில்குமாரை வீட்டிற்கு அழைத்தார். செந்தில்குமார் வீட்டிற்கு வந்து சென்ற பின் வீட்டில் இருந்த பீரோ திறந்த நிலையில் இருந்தது. அதிலிருந்த ஐந்தரை பவுன் செயின் மாயமானது. ராஜேஷ் புகாரில் செந்தில்குமார் மீது வழக்கு பதிந்து வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
கத்தியால் தாக்கிய இருவர் மீது வழக்கு
தேனி: அண்மனைப்புதுாரை சேர்ந்தவர் இளங்கோ. இவரது மகன்கள் கார்த்திக், விக்ரம், மகள் பகவதி. பகவதிக்கும் கடமலைக்குண்டு டாணா தோட்டம் பாண்டீஸ்வரன் என்பவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக இருவரும் அரண்மனைப்புதார் வந்தனர். பாண்டீஸ்வரன் மாமனாருடன் வேலைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பகவதிக்கும் அவரது சகோதரர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வேலை முடிந்து திரும்பிய பாண்டீஸ்வரனை மைத்துனர்கள் இருவரும் தாக்கினர். பின் விக்ரம் கத்தியால் குத்தினார். இருவரும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பினர். காயமடைந்த பாண்டீஸ்வரன் சிகிச்சைக்காக தேனி மருத்தவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவரது புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் மைத்துனர்கள் கார்த்திக், விக்ரம் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.