சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிட முடியாது: மத்திய அரசு விளக்கம்
சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிட முடியாது: மத்திய அரசு விளக்கம்
சட்டங்களுக்கு பெயரிடுவதில் நீதிமன்றம் தலையிட முடியாது: மத்திய அரசு விளக்கம்
ADDED : ஜூலை 03, 2024 12:35 PM

சென்னை: 'சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது பார்லிமென்டின் விருப்பம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது' என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் பெயர் சூட்டியது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. சட்டங்களுக்கு பெயரை ஆங்கிலத்தில் மாற்ற, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்யன் என்பவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று(ஜூலை 03) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், ‛‛புதிய குற்றவியல் சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை மீறவில்லை. யாருடைய அடிப்படை உரிமையையும் மீறவில்லை. 3 குற்றவியல் சட்டங்களுக்கும் ஆங்கில எழுத்துக்களில் தான் பெயரிடப்பட்டுள்ளன. சட்டங்களுக்கு பெயர் சூட்டும் விவகாரம் என்பது பார்லிமென்டின் விருப்பம். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது'' என விளக்கம் அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக, மத்திய அரசுத் தரப்பில் விரிவான பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். வழக்கு மீதான விசாரணை, ஜூலை 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.