அடுத்த 20 ஆண்டுக்கும் பா.ஜ., ஆட்சி தான்: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உறுதி
அடுத்த 20 ஆண்டுக்கும் பா.ஜ., ஆட்சி தான்: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உறுதி
அடுத்த 20 ஆண்டுக்கும் பா.ஜ., ஆட்சி தான்: ராஜ்யசபாவில் பிரதமர் மோடி உறுதி

இருட்டடிப்பு செய்ய முயற்சி
ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி அளித்த பதிலுரை: ஜனாதிபதி உரை மீது தங்களது கருத்துகளை முன்வைத்த எம்.பி.,க்களுக்கு நன்றி.இந்த உரையில் நாட்டு மக்களுக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இடம்பெற்று இருந்தன. தே.ஜ., கூட்டணியை நம்பி, 3வது முறையாக ஆதரவு அளித்து உள்ளனர்.
விளம்பரம்
அரசியல் சாசனத்தை எப்போதும் புனிதமாக கருதுபவன் நான். அரசியலமைப்பு சட்டம் நிறுவப்பட்டதன் 75 வது ஆண்டை கொண்டாடி வருகிறோம். எந்த அரசாக இருந்தாலும் நமது அரசியலமைப்பு கலங்கரை விளக்கம் போல் உதவும் . எனது அரசுக்கு வழிகாட்டியாக இருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்ட புத்தகத்தை சிலர் கையில் வைத்துக் கொண்டு விளம்பரம் தேடிக் கொண்டது ஏன்.அரசியல் அமைப்பு சட்டத்தை மாணவர்கள் புரிந்து கொண்டு மாணவர்கள் விவாதம் நடத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். குடியரசு தினம் இருக்கும் போது தனியாக அரசியல் சாசன தினம் ஏன் என எதிர்க்கட்சிகள் கேட்டன.
5வது இடத்திற்கு
மக்கள் கொடுத்த வெற்றியால், இந்திய பொருளாதாரம், 3வது இடத்திற்கு செல்லும். பெருந்தொற்று காலத்திலும் இந்திய பொருளாதாரத்தை 10 வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளோம். ‛ ஆட்டோ பைலட்' மோடில் இந்திய பொருளாதாரம் வளரும் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன. ஆட்டோ பைலட் முறையிலேயே காங்கிரஸ் ஆட்சி செய்தது. கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்து வருகிறோம். அடுத்த 20 ஆண்டுகளுக்கும் பாஜ., ஆட்சி தான்.
வறுமை
சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து உள்ளது. ஏழை மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து அவர்களின் வாழ்வை மேம்படுத்தி வருகிறோம். அடுத்த 5 ஆண்டுகளில் வறுமைக்கு எதிரான போராட்டத்தை அரசு முன்னெடுக்கும். இந்த வளர்ச்சி என்பது ஆரம்ப கட்டம் தான். வறுமைக்கு எதிராக போர் துவக்கி உள்ளோம்.
விவசாயிகளுக்கு உதவி
கடந்த 10 ஆண்டுளில் இல்லாத அளவிற்கு அடுத்த 5 ஆண்டுகள் வளர்ச்சி வேகமாகவும், சிறப்பாகவும் இருக்கும். சிறுநகரங்கள் கூட வரலாறு காணாத வளர்ச்சியை சந்திக்க உள்ளன. விவசாயிகளின் தேவைகளை கண்டறிந்து கடந்த 10 ஆண்டுகளில் அவற்றை நிறைவேற்றியுள்ளோம். விவசாயிகளுக்கு உற்ற துணையாக இருக்கிறோம். குறைந்தபட்ச ஆதார விலையை இதுவரை இல்லாத அளவிற்கு பன்மடங்கு அதிகரித்தோம். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.