ADDED : ஜன 11, 2024 04:16 AM

டூவீலர் திருடிய சிறுவன் கைது
தேனி:டி.வி.எஸ்., ரோடு சொக்கர் தெரு அரிசி கடை உரிமையாளர் ராஜ்குமார் 50. 2023 டிசம்பர் 9ல் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தனது டூவீலரை வீட்டின் முன்நிறுத்தி விட்டு, காலையில் டூவீலரை பார்த்த போது காணவில்லை. ் தேனி போலீசில் புகார் அளித்தனர்.தேனி டி.வி.எஸ்., ரோடுமுதல் மதுரை ரோடு, பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில்உள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.இதில் டூவீலரை திருடிச்சென்றது 17 வயது சிறுவனை அடையாளம் கண்டு கைதுசெய்தனர்.
தற்கொலை
போடி:எரணம்பட்டியை சேர்ந்தவர் பிரசாந்த் 32. இவருக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இதனால் மனம் உடைந்த இவரது தந்தை வைரக்காளை 55. அப்பகுதியில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். போடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
மரத்தில் இருந்து விழுந்தவர் பலி-
மூணாறு:அருகே பள்ளிவாசல் எஸ்டேட் ஆற்றுக்காடு புதுக்காடு டிவிஷனைச் சேர்ந்த பரமசிவம் 62, மரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தார். அவர் நேற்று காலை ஆடுகளுக்கு தீவனம் சேகரிக்க அருகில் உள்ளகாட்டிற்குச் சென்றார்.வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடியபோது காட்டினுள் இறந்த நிலையில் கிடந்தார்.தீவனம் சேகரிக்க மரத்தில் ஏறியவர் கீழே விழுந்துஇறந்ததாக தெரியவந்தது. மூணாறு போலீசார் விசாரிக்கின்றனர்.
படகு கவிழ்ந்து முதியவர் பலி
இடுக்கி:பூப்பாறை அருகே ஆனயிறங்கல் அணையில் துடுப்பு படகு கவிழ்ந்து என்பதுஏக்கர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ் 71, தண்ணீரில் மூழ்கி இறந்தார்.சின்னக்கானல் அருகே மலைவாழ் மக்கள் வசிக்கும்என்பதுஏக்கர் பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், அவரது நண்பர் பழனிசாமி ஆகியோர் நேற்று 301 காலனியில் பணிக்குச்சென்று விட்டு ஆனயிறங்கல் அணை நீர் தேக்கத்தில் துடுப்பு படகு மூலம் பகல் 3:00மணிக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது பலத்த காற்று வீசியதால் படகு நிலை தடுமாறி கவிழ்ந்தது. தண்ணீரில் தத்தளித்த இருவரும் படகை பிடித்து உயிர் தப்ப முயன்றபோது தங்கராஜ் தண்ணீரில் மூழ்கினார்.அதனை பார்த்து பழனிசாமி பலமாக அலறியதால் சப்தம் கேட்டு சென்றவர்கள் அவரை மீட்டு கரை சேர்த்தனர். தண்ணீரில் மூழ்கி தங்கராஜ் இறந்தார். அவரது உடலை மீட்டனர். சாந்தாம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.