/உள்ளூர் செய்திகள்/தேனி/மூணாறு ரேஷன் கடையை சேதப்படுத்திய படையப்பா யானைமூணாறு ரேஷன் கடையை சேதப்படுத்திய படையப்பா யானை
மூணாறு ரேஷன் கடையை சேதப்படுத்திய படையப்பா யானை
மூணாறு ரேஷன் கடையை சேதப்படுத்திய படையப்பா யானை
மூணாறு ரேஷன் கடையை சேதப்படுத்திய படையப்பா யானை
ADDED : ஜன 03, 2024 06:56 AM

மூணாறு: மூணாறு நகர் அருகே ரேஷன் கடையை சேதப்படுத்திய படையப்பா ஆண் காட்டு யானை மூன்று மூடை அரிசியை நாசப்படுத்தியது.
இந்த யானை கடந்த வாரம் மாட்டுபட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்தது.
நேற்று அதிகாலை மூணாறில் இருந்து மூன்று கி.மீ., தொலைவில் உள்ள பெரியவாரை எஸ்டேட் பாக்டரி டிவிஷனுக்குச் சென்றது.
அங்கு சிவகுமாரி நடத்தி வரும் ரேஷன் கடையின் சுவர், கதவு ஆகியவற்றை சேதப்படுத்தி விட்டு மூன்று மூடை ரேஷன் அரிசியை நாசப்படுத்தியது. யானை சேதப்படுத்திய சுவர் விழுந்து அவர்களின் காரும் சேதமடைந்தது.சம்பவம் குறித்து சிவகுமாரி கூறுகையில், ரேஷன் கடையையொட்டி வீடு உள்ளது. நேற்று ஆங்கில புத்தாண்டு என்பதால் அதிகாலையில் எழுந்து வீட்டின் வெளியே கோலம் போட்டுக் கொண்டிருந்தேன்.
அப்போது கடையில் ஏதோ சப்தம் கேட்டு பார்த்த போது யானை ரேஷன் கடையை சேதப்படுத்திக் கொண்டிருந்தது, என்றார்.
அப்பகுதியில் இருந்து அரை கி.மீ. தொலைவில் மூணாறு, உடுமலைபேட்டை ரோட்டில் நேற்று காலை நடமாடிய படையப்பா அதே பகுதியில் காட்டினுள் பகல் முழுவதும் முகாமிட்டது. அதனால் அந்த வழியில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் அச்சத்துடன் சென்று வந்தனர்.