/உள்ளூர் செய்திகள்/தேனி/எம்.கே.எம்., சட்ட அலுவலகம், வினோரா லா அசோசியேட்ஸ் அலுவலக திறப்பு விழாஎம்.கே.எம்., சட்ட அலுவலகம், வினோரா லா அசோசியேட்ஸ் அலுவலக திறப்பு விழா
எம்.கே.எம்., சட்ட அலுவலகம், வினோரா லா அசோசியேட்ஸ் அலுவலக திறப்பு விழா
எம்.கே.எம்., சட்ட அலுவலகம், வினோரா லா அசோசியேட்ஸ் அலுவலக திறப்பு விழா
எம்.கே.எம்., சட்ட அலுவலகம், வினோரா லா அசோசியேட்ஸ் அலுவலக திறப்பு விழா
ADDED : ஜன 03, 2024 07:05 AM

தேனி: தேனி பெரியகுளம் ரோடு லட்சுமிபுரத்தில் எம்.கே.எம்., சட்ட அலுவலகம், வினோரா லா அசோசியேட்ஸ் அலுவலகங்கள் திறப்பு விழா நடந்தது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா திறந்து வைத்தார். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பாண்டியன், எல்.எஸ்., மில்ஸ் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், மேனகா மில் நிர்வாக இயக்குனர் மணிவண்ணன், எல்.எஸ்., ஸ்பின்னிங் மில் நிர்வாக இயக்குனர் பிரபாகரன் ஆகியோர் தலைமை வகித்தனர். வணிகர் சங்க பேரமைப்பின் தேனி மாவட்டத் தலைவர் செல்வக்குமார், மாநிலத் துணைத் தலைவர் பெருமாள், மாவட்டச் செயலாளர் திருவரங்கப் பெருமாள், மாநில இணைச் செயலாளர் காளிமுத்து, மாவட்டப் பொருளாளர் அருஞ்சுனைக் கண்ணன், முதன்மை தலைவர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். உசிலம்பட்டி முருகன், தொழிலதிபர்கள் சந்திரகுமார், கருணாகரன், சன்னாசி, தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், கலாபாண்டியன், கல்விக்கு குழும தலைவர், கலாபாண்டியன், பொறியாளர்கள் ராதாகிருஷ்ணன், ஆண்டனி, பெஸ்ட் ரவி, குளோபல் லா பவுண்டேசன் மாநில பட்டயத் தலைவர் சரவணன் வாழ்த்திப் பேசினர்.
விழாவில் தேனி நகராட்சி சேர்மன் ரேணுப்பிரியா, துணைத் தலைவர் செல்வம், கவுன்சிலர் பாலமுருகன், வணிகர் சங்க நிர்வாகிகள் பிரபாகரன், விபுகுமார், தங்கராஜ் பழனிக்குமார், அரிமா நிர்வாகிகள் கண்ணன், ஜெகதீஷ், டாக்டர் அறவாழி, டாக்டர் தியாகராஜன், ராஜேஸ் கண்ணன், அஹமதுகான், செல்வகணேஷ், சரவணராஜா, வேல்முருகன், ராமநாதன், செந்தில்குமார், வர்த்தபிரமுகர்கள் கணேஷ் குலோத்துங்கன், பாலபிரகாஷ், மணி, திருமுருகன், வெஸ்டர்ன் கேட்ஸ் சீனிவாசன், ரம்யாஸ் ஹோட்டல் நவநீதன், நட்டாத்தி நாடார் மருத்துவமனை செயலாளர் கமலககண்ணன், லைப் இன்னோவேஷன் பப்ளிக் பள்ளி தாளாளர் நாராயணபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறிஞர் சங்க கூட்டமைப்பின் தென் மண்டல செயலாளர் முத்துராமலிங்கம், தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ராஜன் குடும்பத்தினர் செய்திருந்தனர்.