/உள்ளூர் செய்திகள்/தேனி/ பால் குளிரூட்டும் இயந்திரம் பயன் இன்றி பூட்டி வைப்பு மின் இணைப்பு பெறாமல் ஆவின் அலட்சியம் பால் குளிரூட்டும் இயந்திரம் பயன் இன்றி பூட்டி வைப்பு மின் இணைப்பு பெறாமல் ஆவின் அலட்சியம்
பால் குளிரூட்டும் இயந்திரம் பயன் இன்றி பூட்டி வைப்பு மின் இணைப்பு பெறாமல் ஆவின் அலட்சியம்
பால் குளிரூட்டும் இயந்திரம் பயன் இன்றி பூட்டி வைப்பு மின் இணைப்பு பெறாமல் ஆவின் அலட்சியம்
பால் குளிரூட்டும் இயந்திரம் பயன் இன்றி பூட்டி வைப்பு மின் இணைப்பு பெறாமல் ஆவின் அலட்சியம்
ADDED : ஜூன் 12, 2025 02:37 AM

பெரியகுளம்: பெரியகுளத்தில் ஆவின் அதிகாரிகள் அலட்சியத்தால் ரூ.40 லட்சம் மதிப்பிலான பால் குளிரூட்டும் இயந்திரம் அறையில் பூட்டி வைத்துள்ளனர்.
பெரியகுளம் தாலுகாவில் பால் மாடு வளர்ப்பில் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர்.
பெரியகுளம் பகுதி கிராமங்களிலிருந்து தினமும் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் லிட்டர் பாலை பெரியகுளம் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கு வழங்குகின்றனர். கூட்டுறவு சங்கம் மிக குறைந்தளவில் உள்ளூர் விற்பனை செய்து மொத்தமாக பாலை தேனி ஆவினுக்கு இரு லாரியில் அனுப்பபுகின்றனர். நீண்ட தொலைவில் பால் கறந்து கேன்களில் நிரப்பி 25 கி.மீ., தூரம் உள்ள தேனி ஆவின் குளிரூட்டும் மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
பால் நீண்டநேரம் குளிரூட்டாமல் இருப்பதால் பால் கெட்டுப்போகிறது. பால் வீணாவதை தடுக்க பெரியகுளம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வளாகத்தில் 5 ஆயிரம் லிட்டர் பால் குளிரூட்டும் மையம் (பி.எம்.சி.,) அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதற்காக ஆவின் ரூ.40 லட்சம் மதிப்பிலான பால் குளிரூட்டும் நவீன இயந்திரம், ஜெனரேட்டர் கடந்த ஆண்டு நவம்பரில் வாங்கி சங்கத்தில் திறந்த வெளியில் இறக்கினர். இந்த இயந்திரம் ஆறு மாதங்களாக மழை, வெயிலில் கிடந்தது.
இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனை தொடர்ந்து ஆவின் அதிகாரி கிரேன் மூலம் வெளியில் கிடந்த இயந்திரங்களை குளிரூட்டும் மையத்திற்காக கட்டப்பட்ட அறையில் வைத்து மே 11ல் பூட்டி சென்றனர்.
அப்போது 10 நாட்களில் குளிரூட்டும் மையம்செயல்படும் என்றார். ஆனால் அதன்பின் திட்டம் செயல்படுத்த மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு பெற எந்த முயற்சியும் செய்யாமல் திட்டத்தை முடக்கி வைத்துள்ளனர்.
பால்குளிரூட்டும் மையம் அமைக்க பல லட்சம் செலவில் நவீன இயந்திரங்கள் வாங்கி அதிகாரிகள் அலட்சியத்தால் திட்டம் முடங்கியுள்ளது.