/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஓசி பஸ்ல தானே போறீங்க... தி.மு.க., எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு ஓசி பஸ்ல தானே போறீங்க... தி.மு.க., எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
ஓசி பஸ்ல தானே போறீங்க... தி.மு.க., எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
ஓசி பஸ்ல தானே போறீங்க... தி.மு.க., எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
ஓசி பஸ்ல தானே போறீங்க... தி.மு.க., எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
ADDED : ஜூன் 12, 2025 02:02 AM

ஆண்டிபட்டி,:'ஓசி பஸ்ல தானே போறீங்க' என தி.மு.க., எம்.எல்.ஏ., பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. -
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தி.மு.க., எம்.எல்.ஏ., மகாராஜன் கடமலைக்குண்டு அருகே மண்ணூத்து கிராமத்தில் சமுதாயக்கூடத்தை திறந்து வைத்து பேசியபோது 'ஓசி பஸ்' என்று கூறிய வார்த்தை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடமலைக்குண்டு -மயிலாடும்பாறை ஒன்றியத்திற்குட்பட்ட மண்ணூத்து கிராமத்தில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாயக் கூடத்தை எம்.எல்.ஏ., மகாராஜன் திறந்து வைத்தார்.
அப்போது அவர் பேசியது: நீங்கள் நன்றாக சிந்தித்து பார்க்க வேண்டும். 2019 இடைத்தேர்தல் வரும் போது இங்குள்ள மரம், மட்டைகள் வாடிக்கிடந்தன. குடிக்க தண்ணீர் இல்லை. மகாராஜன் வந்து கால் வைத்தேன். ஏதாவது குறைகள் உண்டா. தற்போதும் ஓடையில் நீர் செல்கிறது.
நீங்கள் கஷ்டப்படாமல் நாலு மணி வரை வேலை செய்யுங்கள். நாலு மணிக்கு மேல் ஓசியாக பஸ்சில் தானே தேனி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி செல்கிறீர்கள். ஆண்கள் வீட்டில் சோறாக்குங்கள்.
இந்த மூன்று ஆண்டுகளில் எவ்வளவு வேலை நடந்துள்ளது. இந்த ரோடு போட போகிறோம். அதில் பஸ் விட போகிறோம். அதிலும் ஓசியாகத்தான் செல்ல போகிறீர்கள். இவ்வாறு அவர் பேசினார்.
கண்டனம்:
இவரது பேச்சிற்கு பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டரில், மகாராஜன் எம்.எல்.ஏ., பேசிய வீடியோவை பகிர்ந்து மீண்டும் தாய்மார்களை ஓசி என அவமானப்படுத்தி இருக்கிறார். மக்கள் வரிபணத்தில்தான் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. உங்கள் தலைவர் சேர்த்து வைத்த பணத்திலா செயல்படுத்துகிறீர்கள். எங்கிருந்து வருகிறது இவ்வளவு ஆணவமும், திமிரும் என பதிவிட்டுள்ளார்.