/உள்ளூர் செய்திகள்/தேனி/ குளிர் காற்றுடன் சாரல் விவசாயிகள் மகிழ்ச்சி குளிர் காற்றுடன் சாரல் விவசாயிகள் மகிழ்ச்சி
குளிர் காற்றுடன் சாரல் விவசாயிகள் மகிழ்ச்சி
குளிர் காற்றுடன் சாரல் விவசாயிகள் மகிழ்ச்சி
குளிர் காற்றுடன் சாரல் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 12, 2025 02:42 AM
கம்பம்: கம்பம் பள்ளத்தாக்கில் கடந்த ஒரு மாதமாக சாரல் மழை தொடர்ந்து பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தது. விவசாயிகள் முதல் போக நாற்றாங்கால் வளர்க்கும் பணிகளை துவக்கி உள்ளனர்.
கடந்த 10 நாட்களாக திடீரென மீண்டும் வெயில் தாக்கம் அதிகரித்து மழை பெய்யவில்லை. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் மீண்டும் குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்ய துவங்கியுள்ளது. வானம் மேகமூட்டமாக, சூரிய வெளிச்சம் இன்றி இருந்தது.
மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு செய்துள்ள நிலையில் சாரல் மழை பெய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.