ADDED : செப் 12, 2025 04:49 AM
தேனி: மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின்படி பெரியகுளம், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, போடி வட்டத்திற்கு உட்பட்ட சார்பு நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்களிலும் (செப்.13ல்) நாளை லோக் அதாலத் நடக்க உள்ளது.
'' என முதன்மை மாவட்ட நீதிபதிசொர்ணம் ஜெ., நடராஜன் தெரிவித்தார்.மேலும் அவர் கூறியிருப்பதாவது: தேசிய மக்கள் நீதிமன்றம் சார்பில் சமரச தீர்வுக்கான வழக்கு விசாரணை நாளை நடக்க உள்ளன.
மோட்டார் வாகன விபத்து இழப்பீடு நிலுவை வழக்குகள், சொத்து, பணம் உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக்கூடிய குற்றவழக்குகள்,
ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீடு, கல்விக்கடன், வங்கிக்கடன் வழக்குகள், குடும்ப வன்முறை வழக்குகள், செக் மோசடி, நுகர்வோர், வருவாய்த்துறைசம்பந்தப்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளன.
பிரச்னைகளை சுமூகமாக தீர்க்க விரும்புவோர் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பங்கேற்று பயனடையலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.