ADDED : செப் 13, 2025 01:48 AM

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரை முத்துராஜா தெருவை சேர்ந்த நிதாஜ் அகமது 50, தன் வீட்டருகே நகராட்சி அனுமதி பெற்று, கார்கள் வாடகைக்கு நிறுத்தும் வாகன காப்பகம் நடத்தி வருகிறார்.
இங்கு, 160 கார்கள் வரை நிறுத்தப்பட்டிருந்தது. நிதாஜ்அகமது குடியிருக்கும் வாகம்புளி புறவீதியில் அவருடன் சேர்ந்து 4 பேர் தங்கள் இடத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆக்கிரமிப்பாளர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. இந்த விரோதம் காரணமாக இதே பகுதி முத்துகிருஷ்ணண், 42, தங்கப்பாண்டி, 35, கார் ஷெட்டில் நுழைந்து இரும்பு கம்பியால் 25 கார்களின் கண்ணாடிகளை நொறுக்கினர். தென்கரை போலீசார் முத்துகிருஷ்ணனை கைது செய்து, தங்கப்பாண்டியை தேடுகின்றனர்.