ADDED : ஜன 07, 2024 07:20 AM
தேனி: தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலையில் சாரல் மழை பெய்வது தொடர்கிறது. நேற்று மாலை 6:45 மணி அளவில் தேனி பகுதியில் மழை பெய்ய துவங்கியது அரைமணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது.இதனால் பணிமுடிந்து வீடு திரும்பியவர்2
கள் மழையில் நனைந்தவாறு சென்றனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் பதிவான மழை அளவு ஆண்டிப்பட்டி 2 மி.மீ., அரண்மனைப்புதுார் 7.2 மி.மீ., வீரபாண்டி 26.2 மி.மீ., பெரியகுளம் 9 மி.மீ., மஞ்சளாறு ஒரு மி.மீ., சோத்துப்பாறை 9 மி.மீ., வைகை அணை 4.2 மி.மீ., போடி 10.4 மி.மீ., உத்தமபாளையம் 18.2 மி.மீ., கூடலுார், பெரியார் அணை தலா 2.8 மி.மீ., தேக்கடி 7 மி.மீ., சண்முகநதி அணை 4.4 மி.மீ., பதிவாகி உள்ளது.