அ.தி.மு.க.,- தி.மு.க., இடையே தான் போட்டி: விஜய் கருத்துக்கு ஜெயக்குமார் பதில்
அ.தி.மு.க.,- தி.மு.க., இடையே தான் போட்டி: விஜய் கருத்துக்கு ஜெயக்குமார் பதில்
அ.தி.மு.க.,- தி.மு.க., இடையே தான் போட்டி: விஜய் கருத்துக்கு ஜெயக்குமார் பதில்
ADDED : மார் 28, 2025 04:32 PM

சென்னை: 2026 தேர்தலில் அதிமுக, திமுக இடையே தான் போட்டி என்று அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார், த.வெ.க., தலைவர் விஜய்க்கு பதிலடி தந்துள்ளார்.
சென்னை திருவான்மியூரில் த.வெ.க.,வின் பொதுக்குழுக் கூட்டம் இன்று (மார்ச்28) நடைபெற்றது. அதில் பேசிய அக்கட்சியின் தலைவர் நடிகர் விஜய், தி.மு.க.,வை, கடுமையாக விமர்சித்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் பெயரையும், பிரதமர் மோடி பெயரையும் உச்சரித்து பேசினார்.
2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் த.வெ.க., தி.மு.க., என்ற இரண்டே கட்சிகளுக்கு மட்டும் தான் போட்டி. நம்பிக்கையுடன் இருங்கள் என்று உணர்ச்சி கொப்பளிக்க உரையாற்றினார்.
அவரின் உரைக்கு தற்போது அ.தி.மு.க., பதிலடி கொடுத்துள்ளது. விஜயின் பேச்சுக்கு அ.தி.மு.க., மாஜி அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது;
உண்மையான களம் அ.தி.மு.க., தி.மு.க., இடையேதான். த.வெ.க., தொண்டர்களை ஊக்கப்படுத்த அவர் (விஜய்) அப்படி பேசி உள்ளார். ஆனால், உண்மையான களம் என்பது அ.தி.மு.க.,தி.மு.க.,வுக்கு தான் என்று பேசினார்.