/உள்ளூர் செய்திகள்/தேனி/தசை பலமிழப்பு நோயால் பாதித்த சிறுவர்களை குணப்படுத்தி சாதனை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர்களுக்கு பாராட்டுதசை பலமிழப்பு நோயால் பாதித்த சிறுவர்களை குணப்படுத்தி சாதனை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர்களுக்கு பாராட்டு
தசை பலமிழப்பு நோயால் பாதித்த சிறுவர்களை குணப்படுத்தி சாதனை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர்களுக்கு பாராட்டு
தசை பலமிழப்பு நோயால் பாதித்த சிறுவர்களை குணப்படுத்தி சாதனை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர்களுக்கு பாராட்டு
தசை பலமிழப்பு நோயால் பாதித்த சிறுவர்களை குணப்படுத்தி சாதனை தேனி அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர்களுக்கு பாராட்டு
ADDED : ஜன 07, 2024 07:17 AM
தேனி: தசை பலமிழப்பு நோயால் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களை குணப்படுத்தி தேனி அரசு மருத்துவக்கல்லுாரி டாக்டர்கள் சாதனை புரிந்தனர்.
தேனி மாவட்டத்தை சேர்ந்த 11 வயது சிறுமி, 10 வயது சிறுவன் இருவரும் கை, கால் செயலிழந்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பரிசோதனையில் இருவரும் 'குல்லியன் பாரி சின்ட்ரோம்' என்ற தசைகளை பலமிழக்க செய்யும் நோயல் பாதிக்கப்பட்டது தெரிந்தது. இவருக்கும் 'இன்ட்ராவீனஸ் இம்யூனோகுளோபுலின்' என்ற நரம்புகளை சீரமைக்கும் மருந்து தரப்பட்டது. சிறுவர்கள் இருவருக்கும் செயற்கை சுவாசமும், முச்சுக்குழாயில் துளையிட்டு 'டிராகியோஸ்டோமி' முறையில் செயற்கை சுவாசமும் வழங்கப்பட்டது. குழந்தைகள் நலப்பிரிவு துறைத்தலைவர் டாக்டர் செல்வக்குமார், டாக்டர்கள் ராமசுப்பிரமணியன் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்தனர்.
சிறுவர்கள் 38 நாட்கள் வரை தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
பிசியோதெரபி சிகிச்சை, ஊட்டச்சத்து உணவுகள், உயர்தர ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்பட்டது.
தற்போது சிறுவர்கள் உடல் தசைகள் பலம் பெற்று நடக்கின்றனர். சிறுவர்கள் பள்ளி செல்கின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ குழுவினரை மருத்துவக்கல்லுாரி முதல்வர் பாலசங்கர், மருத்துவமனை நிர்வாக அலுவலர் டாக்டர் சந்திரா, உதவி நிர்வாக அலுவலர்கள் டாக்டர்கள் ஈஸ்வரன், மணிமொழி, கண்காணிப்பாளர் விஜய்ஆனந்த் உள்ளிட்டோர் பாராட்டினர்.
துறை தலைவர் செல்வக்குமார் கூறுகையில், ' குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் வைரஸ் பாதிப்பு ஏற்படுத்துவதால் இந் நோய் வரும். நோய் அறிகுறியாக கால்,கை அசைவு குறையும். இப் பாதிப்பு இதயத்திற்கு வரும் போது மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படும்.
இதற்கான சிறப்பு மருந்து ஒரு டோஸ் ரூ.11 ஆயிரம். இக் குழந்தைகளுக்க 30 டோஸ் அரசு மருத்துவமனையில் செலுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது', என்றார்.