Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கூட்டத்தை கட்டுப்படுத்த புதுச்சட்டம்: 3 ஆண்டு சிறை, அபராதம் விதிக்க கர்நாடக அரசு முடிவு

கூட்டத்தை கட்டுப்படுத்த புதுச்சட்டம்: 3 ஆண்டு சிறை, அபராதம் விதிக்க கர்நாடக அரசு முடிவு

கூட்டத்தை கட்டுப்படுத்த புதுச்சட்டம்: 3 ஆண்டு சிறை, அபராதம் விதிக்க கர்நாடக அரசு முடிவு

கூட்டத்தை கட்டுப்படுத்த புதுச்சட்டம்: 3 ஆண்டு சிறை, அபராதம் விதிக்க கர்நாடக அரசு முடிவு

ADDED : ஜூன் 19, 2025 10:11 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: கூட்டத்தை கட்டுப்படுத்த புதுச்சட்டம் ஒன்றை கொண்டு வர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அதில், விதிகளை மீறுபவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 4 ம் தேதி, ஐ.பி.எல்., தொடரில் முதன்முறையாக கோப்பை வென்ற பெங்களூரு அணியை பாராட்ட நடந்த விழாவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தனர். பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி தலைமையில் மாநில அரசு விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. அப்போது, மாநில அரசுக்கு அடுக்கடுக்கான கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர்.

இந்நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக புதிய சட்டம் கொண்டு வர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான வரைவு மசோதாவை தயாரித்துள்ள மாநில அரசு, அமைச்சரவை கூட்டத்தில் விவாதித்தது.

வருங்காலத்தில் பெரிய அளவில் கூட்டம் கூடுவதை ஒழுங்குபடுத்தவும், கடந்த 4ம் தேதி நடந்ததுபோன்று மீண்டும் நடைபெறாமல் இருக்கவும் வதிமுறைகள் வகுக்கப்பட்டு உள்ளன.


அதில், விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதமும், 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த சட்டத்தின்படி, போலீஸ் உத்தரவை மீறுபவர்கள், சட்டத்தை மதிக்காதவர்களுக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

அதேபோல், விளையாட்டு நிகழ்ச்சி, சர்க்கஸ் அல்லது வணிக நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்பவர்கள் போலீஸ் அனுமதியை பெறாமல் இருந்தாலோ, சட்டத்தை மதிக்காமல் இருந்தாலோ அல்லது கூட்டத்தை கட்டுப்படுத்த தவறினாலோ கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

அத்தகைய தருணங்களில் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

ஏற்பாட்டாளர்கள் அனுமதி பெறாத நிகழ்ச்சிகளில் உயிரிழப்புகள் அல்லது காயம் ஏற்பட்டால், அது மன்னிக்க முடியாத குற்றம். அதற்கு ஜாமினில் வெளிவர முடியாத வகையில் விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், பாரம்பரிய மற்றும் வழிபாட்டுக்காக ஒன்று சேரும் போதும், தேரோட்டம், படகு திருவிழா மற்றும் மதரீதியிலான கொண்டாட்டத்திற்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us