பெரியாறு புலிகள் காப்பகத்தில் 149 வகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு
பெரியாறு புலிகள் காப்பகத்தில் 149 வகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு
பெரியாறு புலிகள் காப்பகத்தில் 149 வகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு
ADDED : ஜூன் 19, 2025 09:52 PM

மூணாறு:பெரியாறு புலிகள் காப்பகத்தில் நடந்த நீர்நில வாழ்வன, ஊர்வன உயிரினங்கள் கணக்கெடுப்பில் 149 வகை கண்டறியப்பட்டன.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் பல்லுயிர் பெருக்க மையங்களில் பெரியாறு புலிகள் காப்பகம் முக்கியமானதாகும். அங்கு நீர்நிலை வாழ்வன உயிரினங்கள், ஊர்வன உயிரினங்கள் கணக்கெடுப்பு ஜூன் 7முதல் 10 வரை நடந்தது. பெரியாறு புலிகள் காப்பக அறக்கட்டளை, ஆரண்யகம் இயற்கை அறக்கட்டளை சார்பில் நடந்த கணக்கெடுப்பில் கோழிக்கோடு, கண்ணுார் ஆகிய பல்கலை கழகங்கள், கேரள வன ஆராய்ச்சி கழகம் , இயற்கை வரலாற்று சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 73 தன்னார்வலர்கள் பங்கேற்றனர்.
காப்பகத்தில் 21 இடங்களில் நடந்த கணக்கெடுப்பை பெரியாறு புலிகள் காப்பக உதவி கள இயக்குனர் லெட்சுமி, பெரியாறு மேற்கு பிரிவு உதவி இயக்குனர் சந்தீப் துவக்கி வைத்தனர்.
கணக்கெடுப்பில் நீர்நிலை வாழ் உயிரினங்கள் 67, ஊர்வன உயிரினங்கள் 82 என 149 வகை கண்டறியப்பட்டன. ஐ.யூ.சி.என்.சிவப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள 12 வகை உயிரினங்கள் கண்டறியப்பட்டன. புதிதாக ஐந்து வகை நீர் நில வாழ்வன உயிரினங்கள், மூன்று வகை ஊர்வன உயிரினங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாகவும், 149 வகையில் 80 சதவீதம் மேற்கு தொடர்ச்சி மலையில் மட்டும் காணப்படும் உயிரினங்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.