/உள்ளூர் செய்திகள்/தேனி/ சேர்த்தலை டூ பழநிக்கு கேரள அரசு பஸ் இயக்கம் சேர்த்தலை டூ பழநிக்கு கேரள அரசு பஸ் இயக்கம்
சேர்த்தலை டூ பழநிக்கு கேரள அரசு பஸ் இயக்கம்
சேர்த்தலை டூ பழநிக்கு கேரள அரசு பஸ் இயக்கம்
சேர்த்தலை டூ பழநிக்கு கேரள அரசு பஸ் இயக்கம்
ADDED : மே 22, 2025 04:36 AM
மூணாறு: தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநி தண்டாயுதபாணி கோயிலுக்கு கேரளாவில் திருவனந்தபுரம், கொட்டாரக்கரா ஆகிய பகுதிகளில் இருந்து மூணாறு வழியாக பழநிக்கு கேரள அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலையில் இருந்து குமுளி, தேனி வழியாக பழநிக்கு கேரள அரசு அதிவிரைவு பஸ் சேவை நேற்று முன்தினம் முதல் துவங்கியது. சேர்த்தலையில் தினமும் காலை 5:00 மணிக்கு புறப்பட்டு ஆலப்புழா, ஹரிப்பாடு சுப்பிரமணிய சுவாமி கோயில், பள்ளிப்பாடு, கோட்டமுறி, எண்ணக்காடு, செங்கனூர், கோலஞ்சேரி, ரான்னி, எரிமேரி, முண்டக்கயம் வழியாக காலை 10:30 மணிக்கு குமுளி வந்து சேரும். அங்கிருந்து புறப்பட்டு கம்பம், தேனி வழியாக மதியம் 2:30 மணிக்கு பழநி சென்றடைகிறது. பழநியில் இருந்து மதியம் 3:30 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 12:45 மணிக்கு சேர்த்தலை சென்றடைகிறது.