/உள்ளூர் செய்திகள்/தேனி/ சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் பரவல் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் பரவல்
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் பரவல்
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் பரவல்
சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் பரவல்
ADDED : மே 22, 2025 04:36 AM
கம்பம்: சீதோஷ்ண நிலை மாறி வருகிறது. தொண்டை வலி, சளியுடன் கூடிய காய்ச்சல் பரவ துவங்கி உள்ளது . முன்னெச்சரிக்கையுடன் இருக்க சுகாதாரத் துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
வெயிலின் தாக்கம் குறைய துவங்கி உள்ளது. சாரல் மழையும், குளிர்ந்த காற்றும் வீசுகிறது. காற்றின் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. சீதோஷ்ண நிலை திடீர் மாற்றத்தில், பலருக்கு தொண்டை வலி,சளியுடன் கூடிய காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. தொண்டை வலி பரவலாக காணப்படுகிறது.
இது குறித்து காமயகவுண்டன்பட்டி அரசு சித்தா டாக்டர் சிராசுதீன் கூறியதாவது :
தற்போது சீதோஷ்ண நிலை மாற்றத்தால் உடல் நிலையில் மாற்றங்கள் ஏற்படும். தொண்டை தொற்று காணப்படுகிறது . இதற்கு ஆடாதொடை மண பாகு, தூதுவளை லேகியம், கபசுர குடிநீர் போன்ற சித்த மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம். காலை, மாலையில் மஞ்சள், உப்பு போட்டு சுடு நீரில் ஆவி பிடிக்கலாம். இரவு படுக்கப் போகும் முன் வெது வெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை கல் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கலாம். இதன் மூலம் தொண்டை தொற்று, சளி மூக்கடைப்பு குணமாகும் என்றார்.