/உள்ளூர் செய்திகள்/தேனி/ குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாக கூறியவர் கொலை வழக்கு தலைமறைவாக இருந்த 2 பேர் கைது குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாக கூறியவர் கொலை வழக்கு தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாக கூறியவர் கொலை வழக்கு தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாக கூறியவர் கொலை வழக்கு தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாக கூறியவர் கொலை வழக்கு தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
ADDED : மே 22, 2025 03:00 AM
தேனி:தேனியில் குறைந்த விலைக்கு தங்க நகை தருவதாகக் கூறிய பெங்களூரு திலீப் என்பவரை கொலை செய்து புதைத்த வழக்கில், திருப்பூரில் தலைமறைவாக இருந்த உமாராணி 47, கணவர் சேகர் 55 ஆகியோரை நேற்று தேனி போலீசார் கைது செய்தனர்.
தேனி அன்னஞ்சி டீ கடை உரிமையாளர் ஜெயக்குமார் மகன் சஞ்சய். இவரிடம் 2 ஆண்டுகளுக்கு முன் கர்நாடகாவை சேர்ந்த சிலர், போலி தங்க நகைகளை கொடுத்து பண மோசடி செய்தனர். ஆண்டிபட்டியில் சஞ்சய்க்கு சிப்ஸ் கடை உள்ளது. அங்கு தேனி மோகன்ராஜ் ஊழியராக இருந்தார். ஏப்.,14ல் பெங்களூரு மடுவாலாவை சேர்ந்த திலீப் 40, ‛எங்களிடம் தங்க நகைகள் உள்ளது. குறைந்த விலைக்கு தருகிறோம், வாங்கிக் கொள்கிறீர்களா,' எனக் கேட்டார். மோகன்ராஜ் அலைபேசியில் சஞ்சய்க்கு தகவல் அளித்தார். மறுநாள் திலீப், அவரது உறவினர் கலுவாவை பெரியகுளம் அருகே ஜல்லிபட்டி முருகன் தோட்டத்திற்கு காரில் கடத்தி சென்று திலீபை தாக்கி கொலை செய்து, குளக்கரையில் புதைத்தனர். 14 நாட்களுக்கு பின் கலுவாவின் சகோதரி நிர்மலா புகாரில், தேனி போலீசார் திலீப் உடலை ஏப்.,28 ல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர். இந்ந வழக்கில் தனிப்படை போலீசார் 7 பேரை கைது செய்தனர். நேற்று போலீசார் திருப்பூரில் தலைமறைவாக இருந்த சஞ்சய்யின் மாமியார் உமாராணி 47, மாமனார் சேகர் 55, ஆகியோரை கைது செய்தனர்.