ADDED : ஜன 25, 2024 06:01 AM

--பெரியகுளம்; பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியில் 53 வது விளையாட்டு விழா நடந்தது.
கல்லூரி முதல்வர் சேசுராணி தலைமை வகித்தார். செயலளர் குயின்ஸ்லி ஜெயந்தி முன்னிலை வகித்தார்.
ஜே.சி., ரெசிடென்சி செயல் இயக்குனர் ரிஷ்வந்த் ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றினார். துணை முதல்வர் கீதா, உடற்கல்வி இயக்குனர் சுதா உட்பட பேராசிரியைகள் பங்கேற்றனர்.
கோ-கோ, ஓட்டம், கபடி, டேபிள் டென்னிஸ், வாலிபால், கராத்தே உட்பட போட்டிகள் நடந்தது.