/உள்ளூர் செய்திகள்/தேனி/ ஆவின் பால் குளிரூட்டும் நிலையங்களில் ஆய்வு ஆவின் பால் குளிரூட்டும் நிலையங்களில் ஆய்வு
ஆவின் பால் குளிரூட்டும் நிலையங்களில் ஆய்வு
ஆவின் பால் குளிரூட்டும் நிலையங்களில் ஆய்வு
ஆவின் பால் குளிரூட்டும் நிலையங்களில் ஆய்வு
ADDED : ஜூன் 13, 2025 03:13 AM
தேனி: ஆவின் பால் குளிரூட்டும் நிலையங்களுக்கு தரசான்று பெறுவதற்காக ஆய்வுகள் நடந்தது.
மாவட்டத்தில் தேனி சிட்கோ, கோட்டூர், தங்கமாள்புரம், வாய்க்கால்பாறை, வள்ளல்நதி, மல்லிங்காபுரம், தர்மாபுரி, வீரபாண்டி ஆகிய இடங்களில் பால் குளிரூட்டு நிலையங்கள் செயல்படுகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து வந்த தரக்கட்டுப்பாட்டு குழுவினர் தேனி சிட்கோவில் ஆய்வு செய்தனர்.
இதுபற்றி ஆவின் பொது மேலாளர் ரமேஷ் கூறுகையில், 'உணவுத்தரசான்று பெறுவதற்காக ஒவ்வொரு பால் குளிரூட்டு நிலையங்களுக்கும் தலா ரூ.1.25 லட்சம் வரையில் அரசு ஒதுக்கி உள்ளது. இச்சான்று பெற என்னென்ன வழி முறைகள் பின்பற்ற வேண்டும் என விளக்குவதற்காக அதிகாரிகள் குழு வந்திருந்தனர்,' என்றார்.