/உள்ளூர் செய்திகள்/தேனி/ தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் திடீர் போக்குவரத்து மாற்றம் ஆட்டோக்களால் பயணிகளுக்கு இடையூறு தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் திடீர் போக்குவரத்து மாற்றம் ஆட்டோக்களால் பயணிகளுக்கு இடையூறு
தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் திடீர் போக்குவரத்து மாற்றம் ஆட்டோக்களால் பயணிகளுக்கு இடையூறு
தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் திடீர் போக்குவரத்து மாற்றம் ஆட்டோக்களால் பயணிகளுக்கு இடையூறு
தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் திடீர் போக்குவரத்து மாற்றம் ஆட்டோக்களால் பயணிகளுக்கு இடையூறு
ADDED : ஜூன் 13, 2025 03:14 AM

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ராஜ்வாய்க்கால் அமைக்கும் பணிக்காக திடீரென போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
மதுரை ரோடு, பெரியகுளம் ரோட்டில் இடையூறாக ஆட்டோக்களை நிறுத்தியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.2.26 கோடி மதிப்பில் ராஜவாய்க்கால் சீரமைக்கும் பணி நடக்கிறது. பழைய பூமார்க்கெட் கட்டட பகுதி பணி முடிந்திருந்தது. இதனால் கம்பம், போடி செல்லும் பஸ்கள் மட்டும் பஸ் ஸ்டாண்டிற்குள் அனுமதிக்கப்பட்டன.
மறுமார்க்கத்தில் வரும் பஸ்கள் பகவதியம்மன் கோவில் தெரு அருகே பயணிகளை ஏற்றி இறக்கி செல்கின்றன.இந்நிலையில் மற்றொரு பகுதியான கம்பம், போடி பஸ்கள் வெளியேறும் பகுதியில் பணிகள் நேற்று துவங்கப்பட்டது. இதனால் பழைய பஸ்ஸ்டாண்டிற்குள் எந்த வாகனங்களும் அனுமதிக்கப்படவில்லை. பகவதியம்மன் கோவில் தெரு எதிரே பஸ்கள் பயணிகள் ஏற்றி இறக்கி செல்கின்றன. ஆனால், மதுரை ரோட்டில் இருபுறமும் இடையூறாக ஆட்டோக்கள், வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பயணிகளும், பிற வாகன ஒட்டிகளும் சிரமப்படுகின்றனர். போக்குவரத்தை முறைப்படுத்த போக்குவரத்து போலீசாரும், பயணிகளுக்கு தற்காலிக நிழற்கூரை அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.